நாட்டில் இரண்டாவது அலை கோரோனா தொற்று நோய் பரவலால் கடுமையான ஆபத்து இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தார்.
“சுகாதார அறிவுறுத்தல்கள் முறையாக பின்பற்றப்படாவிட்டால், கோரோனா வைரஸ் இலங்கை சமூகத்தில் மீண்டும் பரவுவதற்கான அறிகுறிகளைக் காண்பிக்கும் அதேவேளையில் இது ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கும்.
கோரோனா நோய்த் தொற்றைக் கண்டறிய தற்போது மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை சுகாதார அமைச்சு விரைவுபடுத்தவேண்டும்” என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் செனல் பெர்னாண்டோ வலியுறுத்தினர்.









No comments