Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூரானின் திருவிழா நேரலையாக ஒளிபரப்பு


வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற திருவிழா நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று ஆலய தர்மகர்த்தா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நடைபெறவுள்ள 2020ஆம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருவிழாவில் Covid – 19 நோய் பரவலை தடுக்கும் உபாயமாக அதிகளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்து, முருகப்பெருமானின் கொடியேற்ற நிகழ்வினை தூர தரிசனம் செய்யும் பொருட்டு, நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலய கொடியேற்ற தினத்தன்று இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை இலவசமாக ஆலய உத்தியோகபூர்வ “YouTube’’ தளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களும் உபயோகித்து கொள்ள முடியும்.

“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

Youtupe தள முகவரி –
https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ/featured

ஒளிபரப்பப்படும் நேரம் – 25/07/2020 இலங்கை நேரம் காலை 9.15 – 10.30 வரை என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments