Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தையிட்டி விவகாரம் - கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே குழப்பமாம்


கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து , அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளின் அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட இருந்தது. 

அதன் போது, காணி உரிமையாளர்கள் "காணிகளை விடுவிக்கும் நோக்குடனையே அளக்கின்றோம்" என எழுத்தில் உறுதி மொழி வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரி இருந்தனர். 

அதற்கு இவ்வாறான உறுதிமொழிகளை அதிகாரிகளாக நாம் எழுத்தில் வழங்க முடியாது அதற்கான அதிகாரங்கள் எம்மிடம் இல்லை என கூறியுள்ளனர். 

நீண்ட இழுபறியின் பின்னர் காணி அளவீட்டு பணிக்களுக்காக வந்திருந்த நில அளவை திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் , புத்த சாசன அமைச்சின் அதிகாரிகள் மாவட்ட செயலர் , பிரதேச செயலர் உள்ளிட்ட 07 தரப்பினரும் ஒரு கடிதத்தில் ஒப்பம் வைத்து கையெழுத்திட்டனர். 

அதிலும் திருத்தங்கள் தேவை என கூறி , மறுபடியும் ஒரு கடிதம் எழுதி , அதிலும் திருத்தங்கள் சொல்லி, மூன்றாவது கடிதத்தினை ஏற்றுக்கொண்டனர். 

ஆனாலும் , அதனை ஒரு திணைக்களத்தின் கடித தலைப்பில் எழுதி , அதற்கு கீழ் 7 அதிகாரிகளும் கையெழுத்து வைக்க வேண்டும் என கோரினார்கள். 

நாங்கள் ஏழு அதிகாரிகளும் வெவ்வேறு திணைக்களத்திற்கு உரியவர்கள். ஒரு திணைக்களத்தின் கடித தலைப்பின் கீழ் ஏழு பேரும் ஒப்பமிட முடியாது. அதிகாரிகளாக எழுத்து மூல உறுதி மொழி வழங்கும் அதிகாரமே எமக்கு இல்லாத போதிலும் , ஒரு பொதுவான கடிதத்தில் உறுதிமொழி தந்தும் அதனை ஏற்கா முடியாது விட்டால் அளவீட்டு பணிகளை கைவிடுவோம் என கூறி காணி அளவீட்டு பணிகளை கைவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments