Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

விசாகப்பட்டினத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழப்பு


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்கள் பலர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கப்பல் கட்டுமானப் பணியின் போது எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் சரிந்து, அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே 10 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினரும் பொலிஸாரும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், அந்த கிரேன் புதிதாகக் கொண்டு வரப்பட்டதாகவும், அதனை பொருத்தும் போது விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.

No comments