கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு எதிராக 20 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுத்தேர்தலுக்கு பின்னரே குறித்த முறைபாடுகள் தமிழரசுக் கட்சிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகளும் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் 2 முறைப்பாடுகளும் பளை பொலிஸ் நிலையத்தில் 4 முறைப்பாடுகளும் பூநகரி பொலிஸ் நிலையத்தில் 2 முறைப்பாடுகளும் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் 1முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சியிலுள்ள தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களால் ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களின் வீடுகளுக்குள் புகுந்து வெடி கொளுத்தியமை, அச்சுறுத்தியமை, உடமைகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவே குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன









No comments