கேரளா மாநிலம், இடுக்கி, மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பகுதியில் கனமழையால் நேற்றுமுன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டதில் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன.
இந்நிலையில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 65 இற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் வீடுகளுடன் மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறித்த மீட்புப் பணியில் 200இற்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.









No comments