Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

லெபனான் தலைநகரில் குண்டு வெடிப்பு - உயிரிழப்பு 50ஐ தாண்டியது!


லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிப்பு சம்பவம் துறைமுகப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பழைய வெடிபொருட்களால் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அந்த வெடிபொருள் சோடியம் நைட்ரேட் எனவும்
தெரியவந்துள்ளது.

வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக துறைமுகப்பகுதி மாறியது. இது நைட்ரஜன் டை ஆக்சைடு நச்சு வாயுவாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த வெடிவிபத்து பெய்ரூட்டில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சைப்ரஸ் தீவுகளில் உணரப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 2 ஆயிரத்து 750-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது

இந்த விபத்து குறித்து பேசிய லெபனான் பிரதமர் ஹசன் டிஅப், நட்பு நாடுகள் எங்களுக்கு உதவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் லெபனானுக்கு உதவ முன்வந்துள்ளது.





No comments