Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிலாபம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!


கொழும்பு – குருநாகல் பிரதான வீதியிலுள்ள சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில்  குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, டிப்பர் ரக வாகனம் ஒன்றும் சிறிய ரக கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்  இந்த விபத்து  சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், வலக்கும்புர பகுதியில் மரண வீடொன்று சென்று மீள குருநாகல் நோக்கி பயணித்த  சிறிய ரக காரில் இருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments