குருநாகல் மாநகர மேயர், நகர ஆணையாளர் மற்றும் மேலும் மூவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த ஐவரையும் நீதிமன்றத்தினூடாக பிடியாணை பெற்று, கைது செய்யுமாறு சட்டமா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
குருநாகல் இரண்டாவது புவனேகபாகு மன்னரின் அரசவை காணப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்த கட்டடத்தை சேதப்படுத்தியமை தொடர்பாக இவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
மேலும் தொல்பொருள் கட்டளை சட்டம் மற்றும் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









No comments