Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொள்ளுபிட்டிய கட்டடத் தொகுதியில் தீ

 

கொழும்பு- கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள தனியார் பல்பொருள் கட்டடத் தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீப்பரவல் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த கொழும்பு தீயணைப்பு படையின் 5வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் முதலாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பலரை  பொலிஸார் பாதுகாப்பான முறையில் மீட்டுள்ளனர்.

முதல் மாடியில் ஒரு வர்த்தக நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் கீழ் தளம் வரையில் பரவியதாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments