யாழில் நேற்றைய தினம் நடைபெற்ற பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்ற முற்பட்ட போது, நிகழ்வினை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவர் மலர் மாலை அணிவிக்க முற்பட்ட போது கழுத்தில் மாலை போட வேண்டாம் என் கைகளில் தாருங்கள் என வாங்கினார்.
அதன் பின்னர் தான் மாலை அணிந்து கொள்ளாமை பற்றி யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என தெரிவித்து, தாங்கள் மாலை அணியாததன் நோக்கத்தை தெளிவு படுத்திய போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாலைகளை அணிவதில்லை என நாம் கொள்கை ரீதியாக தீர்மானித்தோம். எம் இனத்தின் விடிவுக்காய் தமது கழுத்தில் நச்சு மாலைகளை அணிந்து போராடி மடிந்தவர்களின் இலக்கை அடையும் வரையில் எம் மினத்திற்கு விடிவு கிடைக்கும் வரையிலும் நாம் பூமாலைகளையோ சந்தன மாலைகளையோ அணிய மாட்டோம் என கொள்கை ரீதியாக தீர்மானித்து சத்தியம் செய்துள்ளோம்.
எப்போது எமக்காக நச்சு மாலைகளை கழுத்தில் அணிந்து போராடி மடிந்தவர்களின இலக்கு வெற்றி பெறுகின்றதோ எம்மினத்திற்கு விடிவு கிடைக்கும் போதே நாம் மாலைகளை அணிவோம். என தெரிவித்தார்.









No comments