Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேர்தல் சட்ட விதிமீறல்கள் தொடர்பாக பதினேழு வேட்பாளர்கள் கைது


பொதுத்தேர்தல் தொடர்பான குற்றங்கள் மற்றும்  தேர்தல் சட்ட விதிமீறல்கள் குறித்து பதினேழு வேட்பாளர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களின் நான்கு வாகனங்களும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலியா சேனரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குற்றங்கள் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியதாக 8 முறைப்பாடுகள் நேற்று  கிடைக்கப்பெற்றன.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 357 முறைப்பாடுகளில் மொத்தம் 440பேர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்றைய நிலவரப்படி  123 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு அவர்களின் பாதுகாப்பில் உள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments