Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சந்நிதியான் ஆலய சூழலில் தொற்று நீக்க நடவடிக்கை!


 வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், கொரோணா  தொற்று  அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி    சமூக இடை வெளியினை பேணி  ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


அடியவர்கள் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளும் நிலையில் ஆலயப் பகுதியில் கொரோணா தொற்றினை  கட்டுப்படுத்தும் முகமாக வல்வெட்டித்துறை நகரசபையின் சுகாதார பிரிவினரால்  ஆலய பகுதியில் கிருமித் தொற்று நீக்கம் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது

 குறித்த கிருமித் தொற்று நீக்கம் செயற்பாடானது இரவு வேளைகளில் ஆலயத்தின் உட்புறம் மற்றும்வெளி  வீதிகளில் முன்னெடுக்கப்படுகிறது .

No comments