அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்துதவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமென மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவித் துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) மத்திய மாகாண ஆளுநர் காரியாலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாகாண சபை தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதா அல்லது பழைய முறைமையில் நடத்துவதா என்பது தொடர்பாக நாடாளுமன்றமே தீர்மானிக்குமெனவும் லலித் யூ.கமகே கூறியுள்ளார்.
எனினும் ஆளுநர் என்ற வகையில், தேர்தலை நடத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.









No comments