கங்கை நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பீகார் மாநிலத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தின் கன்டக், புர்ஹி, பாகமதி, கோசி, மகாநந்தா உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக கங்கையாற்றின் பல்வேறு படித்துறைகளில் நீராட வேண்டாம் என்று பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பீகார் மாநிலத்தை பொறுத்தவரையில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 81 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









No comments