Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அங்கொட லொக்காவின் சகா சுட்டுக்கொலை!

 

அங்கொட லொக்காவின் சகா அசித்த ஹேமதிலக்க பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

முல்லேரியாவில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது முல்லேரியா – வெலிவிட்ட பகுதியில் வைத்து கைக்குண்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘சோல்ட்டா’ என்று அறியப்படும் குறித்த சந்தேகநபர் அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேகநபர் பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments