Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவிராஜ் சசிகலாவையே பிரேரிக்க இருந்தேன்

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவிராஜ் சசிகலாவையே பிரேரிக்க இருந்ததாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பாக சம்மந்தமில்லாத தரப்பினர் தலையிட்டதும், அது தொடர்பாக அவர்கள் நடந்துகொண்ட விதமுவே அதிருப்தியளிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவரது நியமனம் கட்சியினால் இடைநிறுத்தப்பட்டது.

எனினும் நேற்று முன்தினம் வெளியாகியிருந்த வர்த்தமானியில் கலையரசனது பெயர் இடம்பெற்றிருந்தது. இந்தநிலையில் இது தொடர்பாக மாவை சேனாதிராஜா ஊடகமொன்றுக்க கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நான் இந்த தேசிய பட்டியல் நியமனத்தை பெற்றுக்கொள்ள நினைத்திருக்கவில்லை. எனினும் தமிழரசுக் கட்சி மட்டத்திலும் எமது புலம்பெயர் கட்சி உறுப்பினர்கள் மட்டத்திலிருந்தும் என்னை பெற்றுக்கொள்ளுமாறு கூறியதன் பின்னரே நான் சம்மதித்தேன்.

எனினும் நான் சசிகலா ரவிராஜையே தேசியப்பட்டியலுக்காக பிரேரிக்க இருந்தேன். கலையரசன் நியமிக்கப்பட்டமைக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆயினும் அந்த முடிவை கட்சியுடன் கலந்துரையாடாமல் சம்பந்தமில்லாத தரப்பினர் நடந்துகொண்ட விதமே அதிருப்தியளிக்கிறது.

இதேவேளை தேசியப் பட்டியலில் பெயர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை மீளப் பெறுவதா அல்லது அதனையே அமுல்படுத்துவதா என்பது தொடர்பாக நாம் கட்சி மட்டத்தில் கலந்துரையாடியே தீர்மானிக்க முடியும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments