Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் விபத்து - இருவர் சம்பவ இடத்திலையே பலி!

 

வேககட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது இரு இளைஞர்கள் பலி.

வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியதில் 18 வயதுடைய இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் படுகாயமடைந்து சுயநினைவற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு அண்மையாகவுள்ள வளைவில் இந்த விபத்து இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தல் உயிரிழந்தவர்கள் இருவரும் கோணாவிலைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments