Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொழும்பு செல்ல விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!


பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

இந்த விசேட போக்குவரத்து சேவைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இலங்கை ரயில்வே திணைக்களமும் விசேட ரயில் சேவைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments