சசிகலா ரவிராஜ பிழையாக வழி நடத்துறார்கள், அவா ஊடாக சுமந்திரனுக்கு சேறு பூச முனைகிறார்கள் என சுமந்திரனின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றார்கள். ஆனால் சுமந்திரனின் ஆதரவாளர்களோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களோ , தமிழரசு கட்சியை சேர்ந்தவர்களோ சசிகலா ரவிராஜ்க்கு ஆதரவாகவோ ஆறுதலாகவோ இல்லாம இருப்பது சந்தேகங்களை மேலும் வலுவூட்டுகின்றது.
சசிகலா ரவிராஜ் அரசியலுக்கு புதுசு,அவருக்கு இதான் முதல் தேர்தல் தமிழரசு கட்சியே தேர்தலுக்கு அழைத்து வந்தார்கள். அவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவில் கையெழுத்து வைத்த போதே ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்கள் , தமிழரசு கட்சி அனுதாப வாக்குகளை பெறவே சசிகலாவை போட்டியிட அழைத்து வந்துள்ளனர். வாக்குகளை பெற்ற பின்னர் அவரை கட்சியில் இருந்து நீக்கி நடுத்தெருவில் விட்டு விடுவார்கள் என குற்றம் சாட்டினார்கள். அனந்தி சசிதரனையும் அவ்வாறே கட்சியை விட்டு நீக்கினார்கள் என கூறினார்கள்.
இந்நிலையிலே சசிகலா ரவிராஜ் தேர்தலில் போட்டியிட்டு விருப்பு வாக்கு எண்ணும் மோசடிகள் இடம்பெற்று அவரை தோற்கடித்து சுமந்திரனை வெல்ல வைத்ததாக குற்றசாட்டுகள் எழுதன. அதன் அடிப்படையில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என நம்புகிறார்.அவரின் ஆதரவாளர்களும் நம்புகின்றார்கள்.அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பை சார்ந்தவர்களோ , தமிழரசு கட்சியை சார்ந்தவர்களோ முயற்சிக்க வில்லை. முதலில் கட்சியின் தலைமையிடம் சென்று தான் சசிகலா முறையிட்டு இருந்தார்.அவரின் முறைப்பாட்டின் பிரகாரம் கட்சியின் தலைமை அல்லது கட்சி கூடி அவரின் சந்தேகங்களை தீர்க்க வைக்க அல்லது அவருக்கு உதவி இருக்க வேண்டும். ஆனால் கட்சியினால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் எதிர் தரப்பில் நின்று போட்டியிட்டவர்கள். அவரின் வீடு தேடி சென்று ஆறுதல் கூறுகிறார்கள். அநீதி இழைக்கப்பட்டு இருந்தால் உங்க கூட நாங்கள் நிற்போம் என்கிறார்கள்.சேர்ந்து போட்டியிட்ட அல்லது அவர் கட்சி சார்ந்த எவரும் ஆறுதல் கூறவோ அல்லது ஆதரவாகவோ நிற்கவோ இல்லை. கட்சியின் இந்த செயற்பாடு ஆனது சந்தேகங்களுக்கு மேலும் வலுவூட்டி வருகின்றன.











No comments