Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கன்னி அமைச்சரவைக் கூட்டம் இன்று


புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் இன்று  (புதன்கிழமை) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு  அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை தேர்தலின் ஊடாக அமைச்சரவைக்காக 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்களும்  தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் கடந்த 12 ஆம் திகதி சத்தியபிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இம்முறை அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், 2020 ஆம் ஆண்டின் மீதமுள்ள மாதங்களுக்கு வரவு செலவுத் திட்ட முன்மொழிவு அல்லது கணக்கு மீதான வாக்கெடுப்பு தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்த இறுதி முடிவு இன்று எட்டப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

No comments