அரச பேருந்து சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.
தூரப்பிரதேசங்களுக்கான பேருந்து சேவை கடந்த காலங்களில் பாரிய அளவில் குறைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சேவைகள் இன்று முதல் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளது.
பேருந்துகளில் பயணம் செய்ய மக்கள் அச்சம் கொண்டிருந்த நிலையில், அந்த அச்சத்தை போக்கும் வகையில் பேருந்து சேவைகளை உரிய வகையில் நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடமைகளுக்கு செல்கின்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில், போதிய அளவான பேருந்து சேவைகளை நடத்துமாறு, விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சுர் திலும் அமுனுகம, உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதேவேளை, தற்போது மேல் மாகாணத்தை தவிர, ஏனைய பகுதிகளில் தனியார் பேருந்து சேவைகளை உரிய வகையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்









No comments