காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளது என தெரிவித்த பொலிஸார், மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது -19), மாசிலாமணி தவச்செல்வம் (வயது -19) என்ற இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவர் இன்று மாலை 5 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
கே.கே.எஸ். கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)









No comments