Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மஹர சிறைச்சாலை மோதல் – 100 மில்லியன் ரூபாய் இழப்பு



மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, 100 மில்லியன் ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தீயினால் பல்வேறு ஆவணங்களும் நாசமடைந்துள்ளன என்றும் இழப்புக்கணிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த 11 பேரில் இரண்டு பேரின் சடலங்கள் இன்னும் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் உயிரிழந்த ஏனைய 9 பேர் கொரோனா நோயாளர்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களது சடலத்தை எவ்வாறு அடக்கம் செய்வது என்பது தொடர்பான தீர்மானம் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒரு கைதி, வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments