இலங்கையில் கடந்த ஒக்டோபர் 04 முதல் இன்றுவரை கொரோனா தொற்றினால் 139 இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக கொரோனா கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 04 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் 13 பேர் மட்டுமே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.
2020 அக்டோபர் 04 ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட இறப்புகளில் 63 பேர் அதாவது 47.48% விகிதமானவர்கள் 71 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
அத்தோடு 20.86 விகிதமான 61 முதல் 70 வயதிற்கு இடைப்பட்ட 27 பேரும் 16.54 விகிதமான 51 முதல் 60 வயதிற்கு இடைப்பட்டவர்கள் 22 பேரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 41 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட 13 பேரும் 31 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட 04 பேரும் 10 முதல் 30 வயதிற்கு உட்பட 03 பேரும் ஒரு குழந்தையும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments