Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் 142 படகுகளும் 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதம்



புரெவி புயலால் யாழ். மாவட்டத்தில் 142 படகுகளும் 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் வடமராட்சி பகுதியிலேயே அதிகளவான படகுககளுக்கு இவ்வாறு சேதம் ஏற்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார்.

கடல் நீர் தடுப்பணை மற்றும் நங்கூரமிடும் வசதிகள் இன்மை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாகவும் நங்கூரமிடும் மற்றும் தடுப்பணை ஆகியன அமைத்துத்தருமாறு தாம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் எந்த அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என கவலை தெரிவித்தார்.

அத்துடன் தற்போது நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக மீனவர்கள் கடலிற்கு செல்லவில்லை. அதனால் தொழில் இழந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம் எமக்கான நிவாரணங்களை பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என கவலையுடன் தெரிவித்தார். 

No comments