யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதனார் மட சந்தை கொரோனா பரவலினால் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதிக்குப் பின்னர் 59 கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 31 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருதனார்மட சந்தை கோரோனா வைரஸ் பரவலை அடுத்து மேலும் 400 குடும்பங்கள் கடந்த மூன்று நாள்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 144 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை மருதனார் மட சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வியாபார நிலையங்கள் என்பன மறுஅறிவித்தல் வரை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
No comments