நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அகலவத்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 20ஆம் திகதி உயிரிழந்த நிலையில், இறப்புக்கான காரணம் கொரோனா வைரஸ் தொற்றுடன் இரத்தம் விஷமானமை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 185ஆக அதிகரித்துள்ளது.









No comments