Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கடந்த 24 மணித்தியாலங்களில் 460 பேருக்கு தொற்று – ஒருவர் உயிரிழப்பு



இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 460 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 418 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 35 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களில் 07 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 33 ஆயிரத்து 925 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 7 ஆயிரத்து 943 பேர் தற்போது வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் மேலுமொரு உயிரிழப்பு நேற்று பதிவானது.

வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார்.

கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிமோனியா மற்றும் நீண்ட கால சிறுநீராக தொகுதி கோளாறு காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இலங்கையில் ஏற்பட்டுள்ள கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments