Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நேற்று 598 பேருக்கு கொரோனா தொற்று: 483 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள்



 இலங்கையில் நேற்றைய தினம் (சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 598 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதில் 483 பேர் மேல் மாகாணத்தை அதாவது 300 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 164 பேர் கம்பஹாவையும் 84 பேர் களுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 25 பேர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் காலியில் 22 பேரும் அம்பாறையில் 20 பேரும் இரத்தினபுரியில் 17 பேரும் நுவரெலியாவில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் புத்தளத்தில் 7 பேருக்கும் குருநாகல் மற்றும் அனுராதபுரத்தில் தலா 4 பேருக்கும் கேக்கலையில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி, மொனராகலை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டையில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 380 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 32 ஆயிரத்து 51 பேர் குணமடைந்துள்ளதுடன் 8 ஆயிரத்து 142 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 187 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments