மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (டிசெ. 29) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 8 பேருக்கும் தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 19ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 118ஆக உயர்வடைந்துள்ளது.
மருதனார் சந்தையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வியாபாரியுடன் நேரடித் தொடர்புடைய உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 6 பேரும் அவர்கள் 6 பேரும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த கீரிமலை மற்றும் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த இருவருக்கும்
இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் 8 பேரும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தபட்டவர்கள் என மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இரு குடும்பங்களை சேர்ந்த 6 பேருக்கு தொற்று - மருதனார் மட கொரோனா தொற்று 118ஆக உயர்வு
Subscribe to:
Post Comments (Atom)









No comments