நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை சீராக இருப்பதாகவும், நாளையும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று ஐதராபாத் அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஜினி படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருந்த நிலையில், திடீரென மயக்கம் ஏற்பட்டதால் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் ரஜினிகாந்துக்கு எவ்வித கொரோனா அறிகுறியும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் ஓய்வில் இருப்பதாகவும் அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவரது உடல்நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாகவும், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கான மருந்துகள் அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று இரவு மருத்துவமனையில் இருப்பார், நாளையும் அவருக்கு உடல்நல பரிசோதனைகள் நடைபெற இருக்கிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.









No comments