யாழ்.பல்கலைக்கழக ஊழியர் வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் யன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது.
திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் பல்கலைக்கழக ஊழியரான ரட்ணசிங்கம் அகிலன் என்பவரின் வீட்டுக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வேளை புகுந்த வாள் வெட்டு கும்பல் , வீட்டின் யன்னல்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்ததுடன் , வீட்டில் இருந்தவர்களையும் அச்சுறுத்தி சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









No comments