Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புரெவி புயலின் தாக்கம் குறைவடைந்தது



புரெவி (BUREVI) சூறாவளி ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவிழந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 05.30 மணியளவில் மன்னாருக்கு மேற்குத் திசையில் ஏறத்தாழ 145 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

அது நாட்டை விட்டு மேலும் விலகிச் செல்கின்றது. எனவே சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments