Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கத்திக்குத்துக்கு இலக்கானவர் உயிரிழப்பு!



தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்தி பகுதியில் குடும்பத்தலைவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் அவரது வீட்டுக்கு அண்மையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை மோகனதாஸ் (வயது-47) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டிலிருந்து மீசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் புறப்பட்ட அவரை இனந்தெரியாத ஒருவர் வழிமறித்து கையிலும் நெஞ்சுப் பகுதியிலும் கத்தியால் குத்திவிட்டு தப்பித்துள்ளார்.

குருதி வெள்ளத்தில் வீதியில் கிடந்த குடும்பத்தலைவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments