Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனோவை குணப்படுத்தும் மருந்து - கேகாலைக்கு பெரும் ஆபத்து!



கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட மருந்தினை பெறுவதற்காக ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குழுமியதால் கேகாலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

முழு கேகாலைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மிகப்பெரிய ஆபத்தான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர், இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தக்கூடியது என்பது இன்னமும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சோதனைகள், ஆய்வுகள் இடம்பெறுகின்றன என்றும் இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தக்கூடியது என்பது நிரூபிக்கப்பட்டால் தாம் பொதுமக்களிற்கு அறிவிப்போம் என்றும் அதுவரை பொதுமக்கள் பொறுமையாக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸிற்கான எந்த மருந்தும் விஞ்ஞான ரீதியிலான ஆய்விற்கு உட்படுத்தப்படவேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர், இந்த மருந்து இன்னமும் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை, ஆகவே மக்கள் மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் இந்த நெருக்கடியான தருணத்தில் எச்சரிக்கையுடன் செயற்படாவிட்டால் அதனால் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments