Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சோளத்தை பயன்படுத்தி மதுபானம், எதனோல் தயாரிக்கத் தடை



சோளத்தை பயன்படுத்தி மதுபானம், எதனோல் தயாரிப்பதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட, கலால் திணைக்கள ஆணையாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மதுபானம், எதனோல் தயாரிக்க சோளத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவுள்ளது.

இதேவேளை விவசாயிகளிடம் இருந்து மஞ்சள் மற்றும் சோளம் உள்ளிட்ட அறுவடைகளை கொள்வனவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகளை தடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் மஞ்சள் மற்றும் சோளப் பயிர்ச் செய்கையாளர்ளுக்கு நியாயமான விலையொன்றைப் பெற்றுக் கொடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்ற மஞ்சள் தொகைகளை அழிக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments