Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நோய் தொற்றுடனேயே புதிய ஆண்டில் காலடி எடுத்து வைப்பதால் எச்சரிக்கை தேவை



நோய் தொற்றுடனேயே, 2021ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதால் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனவே, சுகாதார வழிகாட்டல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேநேரம், விருந்துபசாரங்களை குடும்பத்தினருடன் மாத்திரம் மட்டுப்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

தொற்றை கட்டுபடுத்துவதற்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் பொதுப் போக்குவரத்து சேவை, சந்தைகளில் பொருட்கொள்வனவின்போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுமார் 9 மாதங்களாக நாட்டில் கொரோனா தொற்று காணப்படுகின்ற நிலையில், விழிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments