Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இந்தியா தப்பி செல்ல முற்பட்டவர்கள் கைது



சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு தப்பி செல்ல முற்பட்ட நபரையும் , அவரை அழைத்து சென்ற படகோட்டியையும் கடற்படையினர் கைது செய்து பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 


பருத்தித்துறை கடற்பரப்பில் இருந்து திருகோணமலையை சேர்ந்த துரைராசா இலட்சுமணன் எனும் நபர் பருத்தித்துறை இன்பசிட்டி  பகுதியை சேர்ந்த புனேஸ்வரன் எனும் படகோட்டியின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பி செல்ல முயன்றுள்ளார். 

குறித்த இருவரும் சென்ற படகு சந்தேகத்திற்கு இடமாக இருந்தமையால் கடற்படையினர் வழிமறித்து சோதனை செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது திருகோணமலை நபர் இந்தியாவுக்கு தப்பி செல்வதை கண்டறிந்தனர். 

அதனை அடுத்து இருவரையும் கைது செய்த கடற்படையினர் , மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அதேவேளை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இலங்கை , இந்திய பணத்தாள்களும் இரண்டு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த படகோட்டி ஏற்கனவே கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் எனவும் , இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. 

No comments