Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பதவியை இராஜினாமா செய்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை!



அமைச்சர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்துள்ளதாக வௌியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சுப் பதவியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளதாக அண்மையில் செய்திகள் வௌியாகியிருந்தன.

இந்த நிலையில் குறித்த செய்தி குறித்து ஊடகமொன்றுக்கு விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இந்த தகவல் பொறுப்பற்ற அறிக்கையால் குழப்பநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் இணைப்பு செயலாளர் ஷமீர் ஸவாஹிர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டது.

இராஜினாமா கடிதத்தை நேற்று காலை ஜனாதிபதியிடம்இ நீதி அமைச்சர் கையளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு, நீதி அமைச்சரின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments