Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் குளங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்பாசன குளங்களின் நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளதுடன், சில குளங்கள் வான் மட்டத்தை அடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

அதற்கமைய, 36′-00″ கொள்ளளவு கொண்ட  இரணைமடு குளம் 29′-8.5″ அடியாகவும், 26′-00″ கொள்ளளவு  கொண்ட கல்மடு குளம் 22′ – 10″ அடியாகவும், 25′-00″ கொள்ளளவு  கொண்ட அக்ராயன் குளம் 22′ – 10″ அடியாகவும், 19′-00″ கொள்ளளவு கொண்ட  புதுமுறிப்பு குளம் 18′ – 05″ அடியாகவும், 12′-00″ கொள்ளளவு  கொண்ட பிரமந்தனாறு குளம் 09′ – 02″ அடியாகவும் உயர்ந்துள்ளது.

அத்தோடு, 10′-06″ கொள்ளளவு  கொண்ட கனகாம்பிகை குளம் அடைவு மட்டத்தை அடைந்து 2″ வான் பாய்கின்றது. 10′-00″ கொள்ளளவு  கொண்ட கல்மடு குளம் 09′ – 10″ அடியாக உயர்ந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

மேலும் 09′-06″ கொள்ளளவு  கொண்ட வன்னேரி குளம் அடைவு மட்டத்தை அடைந்து 3″ வான்பாய்ந்து வருகிறது. 08′-00″ கொள்ளளவு  கொண்ட குடமுருட்டிகுளம் அடைவுமட்டத்தை அடைந்து 2″ வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் தாழ் நிலப்பகுதிகள் மற்றும் குளங்களை அண்மித்துள்ள மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

No comments