கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பியகம பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு தொற்று மேலும் அதிகரித்துவரும் நிலையில், அங்கீகரிக்கப்படாத மருந்துகளை அமைச்சர்கள் பெற்றுக் கொள்வது தவறானது எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இது குறித்து ஆராய்வதற்கு தேவையான நபர்கள் இலங்கையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்துகளை, விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments