Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருங்கள்!



மழை வெள்ளம் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ்.போதனா வைத்திய சாலை பிரதி பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா அறிவுறுத்தி உள்ளார். 

யாழில் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. அதனால் பல்வேறு பட்ட நோய்தாக்கங்கள் ஏற்படும். பலர் வெள்ளங்களின்  ஊடாக நடந்து திரிகின்றனர்,அதனால் தோல் புண்கள் ஏற்படலாம், சேறுகளினால் புண்கள் ஏற்படலாம். அதனால் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். 

வெள்ளங்களில் தேங்கியுள்ள கழிவு பொருட்கள் , உள்ளிட்டவற்றால் நுளம்புகள் பெருகலாம் குறிப்பாக டெங்கு நுளம்பு பெருக கூடிய ஆபத்து உண்டு.  அத்துடன் சளி , காய்ச்சல் , ஆஸ்துமா உள்ளிட்ட நோய் தாக்கங்களும் ஏற்படலாம். 

அதேவேளை நிலங்கள் ஈரலிப்பாக காணப்படுவதனால் , வீடுகளில்  நிலங்களில் படுப்போருக்கு நாரி நோ உள்ளிட்டவை ஏற்படலாம். 

நீர் நிலைகள் , குளங்கள் , கிணறுகளில் நீர் மட்டம் அதிகமாக காணப்படுவதனால் , அவை தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும். தவறி விழுந்து உயிரிழப்புக்கள் ஏற்படுவதனை தவிர்க்கும் முகமாக அவை தொடர்பிலான பாதுகாப்புக்களை உறுதிப்படுத்த வேண்டும். 

அதேவேளை மழை காலங்களில் விபத்துக்கள் ஏற்பட ஏதுவான காரணிகள் காணப்படுவதனால் வாகனங்களை செலுத்தும் போதும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

No comments