Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வெள்ளவத்தை உட்பட மேலும் பல இடங்கள் தனிமைப்படுத்தலில்.



 வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட கொழும்பில் மூன்று இடங்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கொம்பனித்தெருவில் உள்ள ஹுனுப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்டத்தில் 60ஆம் தோட்டம், வெள்ளவத்தையில் கோகிலா வீதி என்பன இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளன.

குறித்த பகுதிகள் அனைத்தும்  நாளை (திங்கட்கிழமை) காலை 5 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளன என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நாளை காலை 05.00 மணி முதல் கொழும்பு மாவட்டத்தின் புளுமென்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள களனி பொலிஸ் பிரிவு நாளை காலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டம் வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலபிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு, எவரிவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன நாளை காலை 05 மணி முதல தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பேலியகொட பொலிஸ் பிரிவின் பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு, பேலியகொடை கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவு, மீகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நாளை காலை 05.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை காலை 05.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments