Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை


 

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதன்படி, குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் மூன்று பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் போது எதிர்கொள்ளக்கூடிய நடைமுறை ரீதியான சிக்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்த ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

பிலியந்தலை, பிலியந்தலை பிரதேச வைத்தியசாலை, மற்றும் கொழும்பு-வடக்கு போதனா வைத்தியசாலைகளில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஒக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கை அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments