Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெல்லியடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்



யாழ்.நெல்லியடி பகுதியில்  வேகக்கட்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்

இந்தச் சம்பவம் நெல்லியடி நகர் மக்கள் வங்கிக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தில் கரெவெட்டி வதிரியைச் சேர்ந்த பேர்னாட் கரன் (வயது-41) என்பவரே உயிரிழந்தார்..படுகாயமடைந்த மற்றையவர்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments