Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நேற்று மட்டும் 787 பேருக்கு கொரோனா தொற்று



 இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 787 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதில் 139 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 108 பேர் கண்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 101 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும் களுத்துறையில் 66 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் குருநாகலில் 65 பேருக்கும் காலியில் 61 பேருக்கும் மாதுளையில் 45 பேருக்கும் இரத்தினபுரியில் 39 பேருக்கும் மாத்தறையில் 23 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அம்பாறையில் 18 பேருக்கும் மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் தலா 14 பேருக்கும் மொனராகலை, புத்தளம், நுவரெலியாவில் தலா 11 பேருக்கும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தலா 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதம் மட்டும் ஒருநாளுக்கு 700 மேற்பட்ட நோயாளிகள் கடந்த 20, 21 ஆம் திகதிகளிலும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளிலும் அடையாளம் காணப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 863 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 48 ஆயிரத்து 617 பேர் குணமடைந்துள்ளதுடன் 7 ஆயிரத்து 968 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறறுவரும் அதேவேளை 278 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments