Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா



மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளா டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மட்டக்களப்பில் 533பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக டாக்டர் நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிஸார், செங்கலடி சுகாதார பிரிவிலுள்ள வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேருக்கும் ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருக்கும் கோறளைப்பற்று மத்தியில் 2 பேர் உட்பட்ட 11 பேரே புதிய தொற்றாளராக கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு அரசடி கிராம சேவகர் பிரிவு தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி சுகாதார பிரிவில் 8 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments