Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மினுவாங்கொட – பேலியகொட கொரோனா கொத்தணி: 50 ஆயிரத்தைக் கடந்தது



நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 669 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 660 பேர் மினுவாங்கொட – பேலியகொட கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மினுவாங்கொட – பேலியகொட கொரோனா கொத்தணிப் பரவலில் இனங்காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை  50 ஆயிரத்தைக் கடந்து 50 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 54 ஆயிரத்து 419 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 46 ஆயிரத்து 594 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 273 பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments