தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும்கொள்ள தேவையில்லை என தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்தின் மருத்துவ நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
முதல் மருத்துவ அதிகாரியாக, இந்திய கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்டதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தடுப்பூசி குறித்த அனைத்து தகவல்களையும் ஆராய்ச்சிகளையும் துல்லியமாக ஆய்வு செய்ததைத் தொடர்ந்தே தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் குறித்த தடுப்பூசி பாதுகாப்பானது என குறிப்பிட்ட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினால் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.









No comments